நாம் பல பைல்களை இணைய தளங்களிலிருந்து அடிக்கடி டவுண்லோட் செய்கிறோம். இந்த பைல்கள் பி.டி.எப்., ஸிப் ஆர்க்கிவ், வேர்ட் என ஏதோ ஒரு பார்மட்டில் இருக்கலாம். பல வேளைகளில் டவுண்லோட் செய்த பின்னர் தான், இந்த பார்மட் பைல் என்றால், இதனை டவுண்லோட் செய்தி டாமல் இருந்திருக் கலாமே என்று எண்ணு கிறோம். ஏனென்றால், அதனைத் திறந்து பார்ப்பதற்கான புரோகிராம் இல்லாமல் இருக்கலாம். அல்லது நாம் மேற்கொண்டு திட்டமிடும் வேலைக்கு அது உகந்ததாக இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, சில பகுதியை காப்பி செய்து இணைக்க எண்ணுகையில், அது பி.டி.எப். பைலாக இருந்தால் உதவாது. எனவே, லிங்க் கிளிக் செய்து அதனை டவுண்லோட் செய்திடும் முன்னர் அந்த பைல் குறித்து ஒரு அலர்ட் மெசேஜ் வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த எதிர்பார்ப்பினை ஈடு செய்திட, மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் ஆட்-ஆன் புரோகிராம் ஒன்றைக் கொண்டுள்ளது. இதனைப் பெற்று இன்ஸ்டால் செய்து விட்டால், வெப்சைட்டில் லிங்க் அருகே கர்சரைக் கொண்டு செல்லும்போதே, அது பைலின் எக்ஸ்டென்ஷனுக்கேற்ப தன் வடிவை மாற்றுகிறது. இதன் மூலம் பைல் வகை என்னவென்று அறிந்து கொண்டு, அந்த பைல் வேண்டுமா என முடிவு செய்து, அதற்கேற்ப செயல்படலாம். இதனைப் பெற கீழ்க்குறித்தவாறு செயல்படவும்.
1. Tools கிளிக் செய்து Add Ons தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு Add Ons டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Get Addons” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.
3. அங்கு உள்ள சர்ச் கட்டத்தில் link alert என டைப் செய்து பின் மேக்னிபை கிளாஸ் பிரஸ் செய்திடவும்.
4. உடன் Link Alert எக்ஸ்டென்ஷன் காட்டப்படும். அதில் கிடைக்கும் “Add to Firefox” என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.
5. உடன் “Software Installation” என்னும் டயலாக் பாக்ஸ் தோன்றும். அதில் “Install Now” என்னும் பட்டன் கிடைத்தவுடன் கிளிக் செய்திடவும்.
6. இந்த ஆட்-ஆன் புரோகிராம் இன்ஸ்டால் செய்தவுடன் “Restart Firefox” என்னும் பட்டனைக் கிளிக் செய்க. நீங்கள் ஏற்கனவே அதனை செட் செய்த படி பயர்பாக்ஸ் உங்கள் விண்டோஸ் மற்றும் டேப்களை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியதை உணர்ந்திடும். இப்பொழுது, உங்கள் கர்சரை ஏற்கனவே குறிக்கப்பட்ட பைல் வகை மீது கொண்டு சென்றால், லிங்க் அலர்ட் அந்த கர்சரை அந்த பைல் வகை குறித்து உங்களுக்கு எச்சரிக்கை செய்தி கொடுக்கும் வகையில் மாற்றிக் காட்டும்.

No comments:
Post a Comment