Saturday, August 27, 2011

கூந்தலை அழகாக அலங்கரிப்பது எப்படி?


விருந்து, விசேஷம் என்று எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் பெண்கள் அழகாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது. அழகென்றால் அங்கொன்றும், இங்கொன்று மாக இல்லை- உச்சி முதல் பாதம் வரை மொத்தமும் அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். குறிப்பாக உச்சி அதாவது கூந்தல் அழகு சூப்பரோ சூப்பராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். `ஏய்.. எப்படி இது! அமர்க்களமா இருக்குதே..!' என்று, பார்ப்பவர்களில் பத்து பேராவது சொல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

கூந்தல் அலங்காரத்தில் பெண்களின் கற்பனைக்கு எல்லைகளில்லை. அந்த கற்பனை களை எல்லாம் நிஜமாக்கும் விதத்தில் கூந்தல் அலங்காரத்திற்கு தேவையான இணைப்பு ஆபரணங்கள் இப்போது நிறைய கிடைக்கின்றன. உடுத்தியிருக்கும் புடவையின் நிறத் திற்கு பொருத்தமான இணைப்பு ஆபரணங்களை கூந்தலில் சேர்த்தால், ஜொலிக்கும் அழகு, அபாரம் என்று சொல்லவைக்கும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென் றால், முகத்தின் அமைப்புக்கு தக்கபடி கூந்தலின் முன்பகுதி அலங்காரம் இருக்க வேண்டும்.

இந்த ஸ்டைல் நல்லா இருக்குதுதானே! கூந்தல் முழுவதையும் ஒருபுறமாக கொண்டுவந்து, கட்டி `சைடு ரோல்' செய்யவேண்டும். இதற்கு `ஸ்ட்ரீம் ஸ்டைல் கூந்தல் அலங்காரம்' என்று பெயர். கவுன் அணியும்போதும், விருந்துகளில் பங்கேற்கும்போது அணியும் உடை களுக்கும் இது பொருந்தும்.

சூப்பரான இந்த கூந்தல் அலங்காரத்தின் பெயர், `ப்ளவரி ஸ்டைல்'. செயற்கை கற்கள் பதிப்பிக்கப்பட்ட வட்டம் கூடுதல் அழகு சேர்க்கிறது. மொத்தமாகப் பார்த்தால் ஒரு பூ, பூத்ததுபோல் இருக்கும்.

இதன் பெயர் கேமரூன் ஸ்டைல். பெரிய `பெட்டல்ஸ்' இணைக்கப் பட்டிருக்கிறது. மேல் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் டியாரா, கிரவுன்க்கு பதிலாக ஜொலிக்கும்.

இதுவும் கேமரூன் ஸ்டைல்தான். சிறிய வகை பெட்டல்ஸ் கோர்க்கப்பட்டு, பூப்போன்ற அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.

இது ஈஸியான ஸ்டைல். அதனால் `ஈஸி ஸ்டைல்' என்று பெயர் வைத்துக்கொள்ளலாம். கூந்தலைச் சீவி, மேல் நோக்கிக்கட்டி அலங்காரம் செய்துவிட்டு ஒற்றையடிப் பாதை போல் வரிசையாக கற் களை கோர்த்து ஜொலிக்கச் செய்யவேண்டியதுதான். இந்த கூந்தல் இணைப்புகள் `பார்ட்டி கவுன்' அணியும்போது கூடுதல் அழகுதரும்.

No comments:

Post a Comment