டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் சொல்வதுண்டு' இவற்றில் எது உண்மை?...
டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல.
உண்மை: ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.