Thursday, July 14, 2011

தெற்கு ரயில்வேயில் பட்டம்/ டிப்ளமோ பயின்றவர்களுக்கு வேலை

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள குரூப் சி மற்றும் டி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பணியின் பெயர்: Vocationalist & Instrumentalist (Cultural- Group 'C')

காலியிடங்கள்: 2 (Vocationalist - 1, Instrumentalist -1)

கல்வித்தகுதி: அரசு ஆங்கீகாரம் பெற்ற இசை கல்லூரியில் சம்மந்தப்பட்ட துறையில் ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.5,200 - 20,200

2. பணியின் பெயர்: Scouts &Guides - (Group 'C')

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Scout - Guide பணியில் முறையான பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாவட்ட, மாநில அளவில் சிறப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.5,200 - 20,200

3. பணியின் பெயர்: Scouts & Guides 'D' (Erstwhile)

காலியிடங்கள்: 12 (இதில் 6 மண்டலங்களுக்கும் தலா 2 இடங்கள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை சென்னை -2, சேலம் - 2, மதுரை - 2, திருச்சி - 2, பாலக்காடு - 2, திருவனந்தபுரம் - 2)

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு ஐடிஐ தேர்ச்சியுடன் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மாவட்ட/மாநில அளவிலான பயிற்சியில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.5,200 - 20,200

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.

உச்ச வயதுவரம்பானது 01.01.2012 தேதிப்படி நிர்ணயிக்கப்படும்.

தேர்வு கட்டணம்: ரூ. 40

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை www.rrcchennai.org.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்திச் செய்து அனுப்பவும். விண்ணப்பப் படிவத்தை 07.07.2011 -க்கு பிறகு இணையதளத்தில் பதவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்திச்செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 09.08.2011

மேலும் விவரங்களுக்கு
www.rrcchennai.org.in இணையதளத்தை பார்க்கவும்.
நன்றி: பயனுள்ள தகவல்கள்

No comments:

Post a Comment