Saturday, July 16, 2011

செல்ஃபோனின் கதிர்வீச்சும் காதுகளின் பாதிப்பும்...!

காதில் எப்போதும் ஒரு வித வலி இருந்து கொண்டே இருந்தது அந்த மனிதருக்கு.... காதுக்குள் புண் இருக்கும் என்று நினைத்து மருந்து வாங்கி போட்டுப்பார்த்தார். வலி குறையவில்லை. ஆனால் காது கேட்கும் திறனும் குறைந்தது. பின்னர் டாக்டரிடம் போனார், காதை சோத்தித்து டாக்டர் காது நரம்புகளில் பாதிப்பு என்று சொன்ன போது அதிர்ந்து போனார். அவர் ஒரு பிசினஸ்மேன். தினமும் பல மணி நேரம் செல்போனில் பேசுபவர். அதுதான் காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.



உலகையே சுருக்கி கையில் வைத்திருக்கிறோம் என்று செல்போன் நம்மை பெருமைப்பட
வைத்தாலும் அது ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். செல்போன்களில் இருக்கும் பேட்டரிகளின் செயல்பாட்டுக்கு மின்காந்த அலைகள்தான் அடிப்படை. சிக்னல்களை வார்த்தைகளாக மாற்றி தொடர்புகளை தூண்டுவதற்கு இந்த அலைகற்றை தான் காரணம். அலைக்கற்றைகளிளிருந்து வெளிவரும் கதிர்வீச்சு தான் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம்.

பொதுவாக எல்லா வகையான கதிர்வீச்சுகளும் மனித உடல்களை பதம்பார்ப்பது உண்டு.
ஆனால் அவற்றின் தன்மையை பொருத்து பாதிப்பின் அளவு மாறுபடுகிறது. எக்ஸ்ரே, அணுக்கழிவுகளில்  இருந்து வெளிப்படும் கதிவீச்சின் அளவை 'ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்' என்ற முறையில் தெரிந்து கொள்ளலாம். இதனை சுருக்கமாக 'சார்(sar )' என்கிறார்கள்.

இந்த 'சார்' கதிர்வீச்சு 0 .6 என்ற அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினைதான். செல்போன்கள் மின்காந்த அலைகளோடு தான் செயல்படுகின்றன. அவைகள் வெளியேற்றும் கதிவீச்சின் அளவில் மாற்றம் வருவதற்கு போலி பேட்டரிகளே முக்கியமான காரணம். அதனால் அளவோடு பயன்படுத்துவதுதான் நல்லது என்கிறார்கள்.

சீனா
, கொரியா செல்போன்களின் பேட்டரிகள் பெரும்பாலும் போலியானதாகவே இருக்கும். ஆனால் இப்படி தரம் குறைந்த போலி பேட்டரிகள் பொருத்தப்பட்ட செல்போன்களின் விற்பனை அதிகமாகிக்கொண்டுத்தான் இருக்கிறது. இவை தான் அதிகமான கதிவீச்சை வெளியுடுகிறது. நீண்ட நேரம் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தினால் காதுகளில் உள்ள 8 - வது கிரேனியல் நரம்பில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்போது 'ப்ளு டூத்' பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. இதிலும் அதிகமான கதிவீச்சு வெளிப்படுவதால் செல்போனை போன்றே ஆபத்தானது என்கிறார்கள். ஆபத்தில்லாமல் அதிகநேரம் செல்போனில் பேசுவதற்கு ஹெட் போனில் பேசுவதுதான் நல்லது.  நிறைய பேர் இடுப்பில் பெல்டுடன் செல்போனை வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஆண்மைக் குறைவு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வசதியாக இருக்கிறது என்பதால் பலரும் செல்போனை வலது காதில் வைத்து பேசுவதால், காதுநரம்புகள் நேரடியாக பாதிக்கப்பட்டு காது செவிடாகிவிடும். எனவே செல்போனை இடது காதில் வைத்து பேசுவதே நல்லது.

செல்போன் கதிவீச்சுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தகுதியான மருத்துவ சான்றிதழக்ளோடு நுகர்வோர் நீதிமன்றங்களில் நிரூபித்தால் நஷ்டஈடு பெற சட்டத்தில் இடமுண்டு. ஆனால் இதுவரை அப்படி எந்த வழக்கும் நீதிமன்ற வரலாற்றில் பதிவாகவில்லை.

No comments:

Post a Comment