பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு அண்ணா பல்கலையில் நடந்து வரும் நிலையில், எந்தெந்த கல்லூரிகளில், எந்தெந்த பாடப்பிரிவுகள், எத்தனை இடங்கள் உள்ளன என்பதை மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் http://www.annauniv.edu இதற்கான சிறப்பு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் எந்த பாடப்பிரிவு எத்தனை கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன என்றும், எந்த கல்லூரியில் எந்தெந்த பாடப்பிரிவுகள் எத்தனை இடங்களுடன் உள்ளது என்றும், ஒரு கல்லூரியின் கோட் எண்ணைக் கொடுத்ததும், அந்த கல்லூரியில் வழங்கப்படும் பாடப்பிரிவுகளின் விவரமும், ஒரு மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியலையும் அறியும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்கச் செல்லும் மாணவர்கள், உடனுக்குடன் மாற்றியமைக்கப்படும் இந்த விவரத்தை பார்த்து அவர்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வு அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணினி மூலமாகவும், பெரிய திரைகள் மூலமாகவும் இதனை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வில் 100 மாணவர்கள் பொறியில் சேர்க்கை பெற்ற நிலையில், இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இன்று முதல் ஜுலை 7ம் தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது.
ஜுலை 8ம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment