Friday, July 22, 2011

படிக்காமலே ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்க!'



"ஸ்மார்ட்' பயிற்சி திட்டத்தின் முதன்மைச் செயல் அலுவலர் செந்தில் குமார்: இந்தியாவில் அதிகளவில், பணிவாய்ப்பை வழங்கும் துறையில் விவசாயத் துறைக்கு அடுத்த இடம் ஜவுளித் துறைக்கு உண்டு. இந்த துறையில், தற்போது 70 லட்சம் பேர் நேரடியாகவும், இரண்டரை லட்சம் பேர் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.




இந்தியத் தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளில் இருக்கும் பலத்த வரவேற்பு காரணமாக இந்த தொழில் இன்னும் பெரியளவில், விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு திட்டம் மூலம் திறமையான பணியாளர்களை உருவாக்கித்தர பயிற்சிகளை அளிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக, "ஸ்மார்ட்' என்ற பெயரில், பயிற்சி மையங்களை இந்தியா முழுவதும், 57 இடங்களில் நிறுவியுள்ளனர்.



கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை எழும்பூரில், "ஸ்மார்ட்' கிளை தொடங்கப்பட்டது.ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு ஏதுவாக, 12 விதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஐந்தாம் வகுப்பு படித்தவர்கள் கூட அடிப்படைப் பயிற்சியிலும், வேறு சில பயிற்சிகளிலும் சேரலாம்.



ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான பயிற்சிகள் இவை. பயிற்சியை முடித்தவர்களுக்கு அரசுச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு வந்து போக பயணப் படியும் நாங்களே வழங்குகிறோம். குறைந்த கட்டணத்தில், நிறைய சலுகைகளுடன், இந்த பயிற்சியை வழங்க முடிகிறது. "ஸ்மார்ட்' பயிற்சியை முடித்தவர்களுக்கு ஆயிரக்கணக்கில் ஊதியம் தர ஏற்றுமதி நிறுவனங்கள் தயாராக உள்ளன.


No comments:

Post a Comment