உலகிலேயே இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் அதுவும் தமிழகத்தில் இன்னும் அதிகம் என்பது சாதாரண செய்தியாகிவிட்டது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எட்டுக்கோடியே எட்டப்போகிறார்கள் என்ற பேராபத்தைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை அண்மையில் எடுத்த ஆய்வு.இந்தியர்களின் உணவுப் பழக்க வழக்கமே இவ்வளவு நோயாளிகளின் பெருக்கத்திற்கு காரணம் என்கிறது.
சர்க்கரை நோயைப் பொறுத்தவரை மருந்துகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உணவுகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். * சர்க்கரை நோய் என்பது எது? சிலருக்கு கணையம் இன்சுலினைச் சுரக்க இயலாமல் போய்விடும். இதனால் சர்க்கரை சக்தி உடலில் சேராமல் போய் ரத்தத்திலேயே தங்கிவிடும் அதுதான் சர்க்கரை நோய் கண்டுகொள்ளாமல் விட்டால் ஆபத்தான நோயும் கூட .
இதில் அடிப்படையாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கட்டாயமாக தினமும் இன்சுலின் ஊசிமூலம் ரத்தத்தில் ஏற்றிக்கொள்ளும் நிலை. இது டைப் 1 நீரிழிவு இரண்டாவது. மாத்திரைகளாலேயே ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் நிலை இது டைப் 2 நீரிழிவு. நீரிழிவு நோயாளிகள் அதிக கவனம் செலுத்த வேண்டியது கார்போஹைட்ரேட் விஷயத்தில்தான் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவை அதிகம் உண்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்.எனவே, ஒரே தடவையாக உணவை எடுத்துக் கொள்ளாமல் பிரித்துப் பிரித்துக்கூட உண்ணலாம்.
நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய உணவுகள், தவர்க்க வேண்டிய உணவுகள் சில கீழே தரப்பட்டுள்ளன. இவற்றைக் கடைப்பிடித்தாலே ஒரளவிற்கு நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும். சேர்க்க வேண்டிய உணவுகள்: தவிட்டரிசி, ஓட்ஸ், ஆட்டாமா, வாழைத்தண்டு, வாழைப்பூ, வெள்ளை முள்ளங்கி, முட்டைக்கோஸ், வெண்டை, பீர்க்காய், வெள்ளப்பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், காராமணி, கொத்தவரை, அவரை, பீன்ஸ், வெங்காயம், முருங்கை, நூல்கோல், வெள்ளரிக்காய், தக்காளி, கத்தரிக்காய், காலிஃபிளவர், குடைமீளகாய், கோவக்காய், சௌசௌ போன்ற காய்கறிகள்
மற்றும் முருங்கை, மணத்தக்காளி, பசலை, கொத்துமல்லி, புதினா, சிறுகீரை, பருப்புக்கீரை, அகத்திக்கீரை, மூளைக்கீரை, புளிச்சக்கீரை, வெள்ளரி, சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜுஸ், வெஜிடேபிள் சூப், எண்ணெய், இல்லாத உப்பிட்ட ஊறுகாய், இஞ்சி. நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரீஃபைண்ட் ஆயில். முட்டை வெள்ளைக் கரு மட்டும் மீன் இரண்டு துண்டு கோழிக்கறி தோல் நீக்கியது நான்கு துண்டு ஆட்டுக்கறி நான்கு துண்டு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் போது மட்டும் அதுவும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டும் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, கொய்யா, தர்பூசணி, கேரட், பீடருட், பட்டாணி, டபுள் ஃபீன்ஸ் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டியவை: சர்க்கரை, தேன், வெல்லம், ஜாம், தேங்காய்ச் சட்னி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் டால்டா, ஹார்லிக்ஸ், போன்விட்டா, பூஸ்ட், கூல்டிரிங்ஸ் அனைத்தும், டின்னில் அடைக்கப்பட்டிருக்கும் பழச்சாறு: வேர்க்கடலை, பாதாம்பருநப்பு, முந்திரிப்பருப்பு, உலர்ந்த பழங்கள், கேக், ஈரல், மூளை, ஆட்டுக்கால்,மாம்பழம், அன்னாசிப்பழம், சாப்போட்டா, சீதாப்பழம், பனம்பழம், திராட்சை, இளநீர்,வாழைப்பழம், உருளை, சேனை, மரவள்ளி, சேப்பழங்கு. இனிப்பைத் தவிர்த்து குறைந்த கொழுப்பை உணவில் சேர்த்து, நார்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உட்கொண்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்
ayya ungal yosanaikku nandri. irunthalum ethai kadaipidikka mudiyomo athaiym konjam serthu anuppavum.
ReplyDeletenandriydan
Madurai Nanban