Monday, July 18, 2011

தங்கத்திற்கு இத்தனை மகிமையா?


தங்கம் ஓர் ஆபரணப் பொருளாக மட்டுமில்லாமல் பலவகையிலும் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டுவருகிறது. ஆயுர்வேதத்தில் தங்க பஸ்பத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் சுருக்கங்களை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் அழகு பூச்சுகளில், தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது.


உடலின் செல்களுக்கும், டிஷ்யு’களுக்கும் இன்றியமையாத ஒரு “மினரல்’ தங்கம். தங்கம் சேர்ந்த பானங்களை மருந்துகளை உட்கொள்வதோடு மட்டுமில்லாமல்,ஊசிமூலமாகவும் தங்கம் சேர்த்த கூட்டுக்களை சருமத்தினுள் செலுத்தலாம் மூட்டு வியாதிகளுக்கு தங்கம் ஒரு சிறந்த மருந்து என்பதை மருத்துவ விஞ்ஞானமே கூறியுள்ளது. இந்த சிகிச்சை முறைக்கு “க்ரைஸோ தெரபி’என்றுபெயர். தங்கத்துக்கு “கேன்ஸர்’ சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தும் திறன்இருப்பதால், அதற்கான ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.


பேரலிஸிஸ்’நோயால் முகம் பாதிக்கப்பட்டு,கண் இமைகளை மூட முடியாமல்சிரமப்படுபவர்களுக்கு தங்கத் தகடை இமைகளின் மேல் பாகத்தினுள்பொருத்தி,நிவாரணம் அளிக்கப்படுகிறது.
சூரியனின் உஷ்ண கிரணங்கள் தாக்காமலிருக்க விண்கலனின் சில பாகங்களில்,மெல்லிய தங்கப்பூச்சு கொடுக்கப் படுகிறது. அதுமட்டுமின்றி விண்கலனில்செல்பவர்கள் அணியும் “ஹெல்மெட்’டிலுள்ள கண்ணாடித் தடையில் தங்கக்“கோட்டிங்’ கொடுக்கப்படுகிறது.


மின் ஓட்டத்தை தங்கம் வெகு எளிதில் கூடத்துகிறது. செல்ஃபோன், கணிப்பொறிபோன்ற பொருள்களில் உபயோகப்படும் “எலெக்ட்ரானிக் சர்க்யூட்’களில் சிறிய“வால்டேஜ்’ல் சிறிய அளவில் “கரெண்ட்’அனுப்பவும்,வினாடிக்கு பல தடவை தொட்டுவெட்டு நடத்தும் இணைப்புகளிலும் தங்கம்தான் உபயோகிக்கப்படுகிறது.


ஆலய கோபுரங்களின் உச்சியிலும், பிரபலமான பழமைவாய்ந்த கட்டடங்களின்கூரைகளிலும் தங்கத்தகடுகள் பதிக்கப்படுகிறது. இதனால் கட்டடத்தின் அழகுஅதிகரிப்பதுடன் அவை சுற்றுச் சூழல்களால் ஏற்படும் சேதத்திலிருந்தும்காப்பாற்றப்படுகின்றன. இது “லீஃபிங்க்’ அல்லது “கில்டிங்க்’ என்றுஅழைக்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்துக்கு தங்கம் அளவுகோல். உலகம் தோன்றிய நாள் முதலேஒரு விலையுயர்ந்த உலோகமாக மதிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல வகையிலும் உபயோகப்படுகின்ற வேறு ஒரு உலோகத்தை, நம்மால்நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான் தங்கத்துக்கு இத்தனை மகிமை.

நன்றி: அபூவஸ்மீ இனையதளம்.

No comments:

Post a Comment