பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பி.எச்.டி ஆய்வு மேற்கொள்ளும் பெண்கள் ஆகியோருக்கு ஃபேர் அன்ட் லவ்லி நிறுவனம் உதவித் தொகை வழங்க உள்ளது.
பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய பெண்கள் உயர் கல்வி பெற ரூ.1 லட்சம் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும். 10-வது மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த பட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற பெண்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 20-ம் தேதியாகும்.
இதற்கான விண்ணப்பங்கள் www.fairandlovely.in இணையதளத்தில் உள்ளன. Fair and Lovely Scholarship 2011, Fair and Lovely Foundations, P.O. Box No. 11281, Marine Lines Post Office, Mumbai - 400020 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment