Sunday, July 10, 2011

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க ...........


SOFTWARES - என்னும் மென்பொருட்கள் கணினிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று! நமது வேலை பளுவை குறைக்கவும் இன்னும் பல அதிக வசதிகளுக்கும் மென்பொருட்களையே நாம் நம்பி இருக்கின்றோம். மென்பொருட்கள் இல்லாத கணினிகளை வெறும் குப்பைக்கு சமம் என்றே சொல்லலாம். இந்த மென்பொருட்களை பிரபலமான பல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து, விலை நிர்ணயம் செய்து நம்மிடம் விற்பனை செய்கிறது.

இவ்வகையான மென்பொருட்களை, விலைக்கு வாங்கி, உபயோகிக்கையில் நம்முடைய கணினி எவ்வித பிரச்சினையுமில்லாமல் பாதுகாப்புடன் செயல்பட ஏதுவாகிறது.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் எந்த மென்பொருளையுமே பைசா செலவில்லாமல் CRACK அல்லது இணையத்தில் நிரம்பி வழிந்து கொட்டி கொண்டிருக்கும் இலவச மென்பொருட்களையே தரவிறக்கம் செய்து உபயோகிக்கிறோம்.

இப்படியான இலவச மென்பொருட்களை தரவிறக்கி, உபயோகிக்கும் போது சில MALCIOUS மென்பொருட்களால் நம்முடைய கணினி பாதிப்படைய வாய்ப்புள்ளது. Anti Virus மென்பொருளாலும் இவ்வகை, MALCIOUS - மென்பொருட்களை கண்டறிய முடியாமல் போவதால் நமது கணினி மேலும் மேலும் பாதிப்படைந்து நாளடைவில் முற்றிலும் செயலிழந்துப்போகும் நிலை ஏற்படும்.

ஆக இந்த பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக MICROSOFT நிறுவனம், MALCIOUS மென்பொருட்களை கண்டறிந்து நீக்குவதற்காக ஒரு மென்பொருளை வெளியிட்டு உள்ளனர்.


Malcious Software Removal என்னும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணினியில் பதியும் போதே இந்த மென்பொருள் கணினியை ஸ்கேன் செய்ய ஆரம்பித்து விடும்.

கணினியின் அனைத்து மென்பொருட்களுடன், Executable File - கள் யாவும் ஸ்கேன் செய்யப்படும்.

அப்படி தீங்கு விளைவிக்கக்கூடிய மென்பொருட்கள் ஏதேனும் கணினியில் கண்டறியப்பட்டால், அதை உடன் அழித்து விடும்.

கணினியில் தீங்கு விளைவிக்கும் எந்த MALCIOUS மென்பொருளும் இல்லாத பட்சத்தில், அதாவது கணினியின் அனைத்து மென்பொருட்களும் நல்ல நிலையில் இருக்குமேயானால், 'கணினியின் எந்த மென்பொருளும் பாதிக்கப்படவில்லை' என்ற செய்தியையும் தரும்.

No comments:

Post a Comment