Thursday, July 14, 2011

கப்பல்கழகத்தில் பயிற்சி இன்ஜினியர் வேலை


மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கப்பல் போக்குவரத்து கழத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Trainee Marine Engineer

கல்வித்தகுதி: Mechanical/ Naval Architecture பாடப்பிரிவில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்பை AICTE அங்கீகாரம் பெற்ற கல்லூரில் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2012 அன்று 28 வயதிற்குள் இறுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படியும், பெண்களுக்கு 2 ஆண்டும் உச்ச வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000 (எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500) இந்த கட்டணத்தை '' The Shipping Corporation of India Ltd., Mumbai'' என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி,-யாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.shipindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2011

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட அவுட்டை பதிவிறக்கம் செய்து தேவையான இடத்தில் கையெப்பமிட்டு அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் மற்றும் விண்ணப்பக் கட்டணத்துக்கான டி.டி,-யையும் இணைத்து விரைவு அல்லது சாதாரண தபாலில் அனுப்பவேண்டும்.

விண்ணப்பக் கவரின்மீது ''Application For Trainee Marine Engineer Batch 2012'' என்று குறிப்பிட வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரின்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்களை அனுப்பக் கடைசி நாள்: 22.07.2011

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

Post Box No: 99, G.P.O. KOLKATA - 700011, West Bengal.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 31.07.2011 எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை.

நன்றி: பயனுள்ள தகவல்கள்

No comments:

Post a Comment