Saturday, April 9, 2011

புதுவை: 183 வேட்பாளர்களில் 24 பேர் கிரிமினல்கள்..


புதுவை: தேர்தலில் போட்டியிடும் 183 வேட்பாளர்களில் 24 பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது என ஜனநாயக சீர்திருத்த சங்க நிறுவனர் ஜெகதீப் சோர்கார் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, நடப்பு தேர்தலில் 30 தொகுதிகளில் போட்டியிடும் 183 வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்தது. ஆய்வு செய்யப்பட்ட 183 பேரில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த 24 பேரில் 5 பேர் மீது கடத்தல், பணம் பறிப்பு போன்ற கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து முக்கிய கட்சிகளுமே கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களுக்கு தேர்தலில் நிற்க டிக்கெட் கொடுத்துள்ளன.
அ.தி.மு.க., சீட் கொடுத்துள்ள 10 பேரில் 4 பேர் மீதும், தி.மு.க.,வின் 10 பேரில் 2 பேர் மீதும், அகில இந்திய என்.ஆர் காங்.,கின் 18 பேரில் 7 பேர் மீதும், காங்., கட்சியில் 17 பேரில் 2 பேர் மீதும், தே.மு.தி.க.,வில் ஒருவர் மீதும், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கம்யூனிட் 3 பேரில் ஒருவர் மீதும்,. பா.ஜ..,வில் 20 பேரில் ஒருவர் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆய்வு செய்யப்பட்ட 183 பேரில் 48 பேர் ஒரு கோடிக்கு மேல் சொத்து குவித்து கோடீஸ்வரர்களாக உள்ளனர். தி.மு.க.,வேட்பாளர்கள் 80 சதவீதம் பேரும், காங்.,வேட்பாளர்கள் 76 சதவீத பேரும் கோடீஸ்வரர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


puduvai, criminal candidates, case, 

No comments:

Post a Comment