Monday, April 18, 2011

தரமான பெர்ஃப்யூம் வாங்கலாம் வாங்க...!


ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்லஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்?


மின்னுவதெல்லாம் பொன்னல்ல! என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும்.
பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ப்யூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.
பெர்ஃப்யூமில் எத்தனை வகைகள் இருக்கின்றன?
சாக்லெட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ் என்று எக்கச்சக்க நறுமணங்களில் பெர்ஃப்யூம்கள் கிடைக்கின்றன. ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின்னிற்கு ஏற்றவாறு செலக்ட் செய்யலாம்.
ஞாபகம் இருக்கட்டும், பாடி ஸ்பிரே வேறுபெர்ஃப்யூம் வேறு!
பாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது. அதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான்.
வேறு எப்படித்தான் இந்த பெர்ஃப்யூமைப் பயன்படுத்துவது?
சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.
கவனத்தில் வையுங்கள்:
சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.
சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது.
எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.
பெர்ஃப்யூமை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும்?
நம் உடம்பில் வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களான அக்குள், கழுத்தின் பின்புறம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால் கழுத்து முடியிலோ செயினிலோ, படாதவாறுதான் அடித்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment