இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வீடுகளிலும் பள்ளிகளிலும், குழந்தைகளை இது போன்ற பாலியல் தளங்களையும், ஏமாற்றும் தளங்களையும் அடையாளம் கண்டு பாதுகாப்பது சிரமமான காரியமாக உள்ளது. இணையத்தில் கே9 வெப் புரடக்ஷன் (K9 Web Protection) என்ற பெயரில் இது போன்ற தளங்களை வடிகட்டும் சாப்ட்வேர் ஒன்று தரப்பட்டுள்ளது.
இதன் தளத்தில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை எப்படி டவுண்லோட் செய்து பயன்படுத்துவது என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.
இதன் தளத்தில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை எப்படி டவுண்லோட் செய்து பயன்படுத்துவது என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.
முதலில் http://www.k9webprotection.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இந்த சாப்ட்வேர் புரோகிராமினை டவுண்லோட் செய்திடுங்கள். டவுண்லோட் செய்திடும் முன் உங்கள் பெயர், முகவரி போன்ற பெர்சனல் தகவல்கள் கேட்கப்பட்டு படிவம் ஒன்றில் நிரப்பி இணையத்தில் அனுப்ப வேண்டும். பின் கே9 தளம் நீங்கள் தந்த இமெயில் முகவரிக்கு ஒரு அஞ்சல் அனுப்பும். அதில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த ஒரு கீ தரப்படும். சாப்ட்வேர் தொகுப்பினை டவுண்லோட் செய்த பின், அதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இந்த புரோகிராம் தானாகவே பாலியல் தகவல்கள் கொண்டுள்ள தளங்களைத் தடுத்துவிடுகிறது.
இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தளம் இடம் பெற்றால், அதனை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். தடை செய்யக் கூடிய பொருட்கள் குறித்த பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது. கே 9 வெப் புரடக்ஷன் சாப்ட்வேர் இந்த வகையில் மிகவும் பயனுள்ள புரோகிராமாக உள்ளது. குழந்தைகள் மோசமான தளங்களைப் பார்ப்பதிலிருந்து தடுக்கிறது.
sex, wensite, ban, child, software, puduvai
நன்றி: உங்களுக்காக
No comments:
Post a Comment