Friday, April 8, 2011

மொபைல் வழி வங்கிச் சேவைகளை அளிக்கும் இந்திய வங்கிகள்......

இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்களின் சேவைகளை மொபைல் மூலமாக அளிப்பதில், அதிலும் குறிப்பாக எஸ் எம் எஸ் (குறுஞ்செய்தி) மூலம் கொடுப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பணப்பரிமாற்ற விபரங்கள் & அக்கவுண்ட் விபரங்களை அறிதல் போன்றவற்றுக்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இச்சேவையைப் பெறுவதற்கான சேவைக்கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள் இச்சேவையை இலவசமாகவும், சில வங்கிகள் வருடாந்திர கட்டணத்தை வசூலித்தும் அளிக்கின்றன.
ஆனால் வங்கிகளின் மொபைல் வழிச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு ஆகும் மொபைல் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சில வங்கிகள் தனிப்பட்ட ஒரு மென்பொருளை ஒவ்வொருவருடைய கைபேசியிலும் (மொபைல் போனில்)உட்செலுத்தி தனி நபர் மொபைல் பேங்கிங் சேவையை அளிக்கத் துவங்கி உள்ளன. ஆனால் ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட செல்போன்களில் மட்டுமே இது சாத்தியம். ஆனால், இம்முறையைச் செயல்படுத்துவது மிகவும் சுலபம். வங்கிகளின் இந்த புதிய முறையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.
மொபைல் வழி வங்கிச் சேவைகளை அளிக்கும் வங்கிகளில் சில பின்வருமாறு:

No comments:

Post a Comment