Thursday, April 7, 2011

புதுவை மக்கள் அனைவருக்கும் பிரஷர் குக்கர்! முதல்வர் அறிவிப்பு


புதுவை: அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக பிரஷர் குக்கர் வழங்கப்படும்', என்று முதல்வர் வைத்திலிங்கம் கூறினார். இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு  பேசிய அவர் புதுச்சேரி காங்., தேர்தல் அறிக்கையில் சில அறிவிப்புகள் விடுபட்டு விட்டது. அந்த அறிவிப்புகளை தற்போது வெளியிடுகிறோம்.

குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்கு 50 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் மேலும். சத்தான உணவு தயாரிக்க பயன்படும் வகையில், "பிரஷர் குக்கர்' அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படும். கோவில் அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். வேலையில்லாத பட்டதாரிகளுக்கு உதவும்வகையில், படிப்பை முடித்தவுடன் முதல் 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.என்று முதல்வர் கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கூறியதாவது: காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதியுதவி 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். ஆதிதிராவிட மக்களுக்கு வீடு கட்டும் நிதியுதவி 2 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அதை 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உள்ளோம். ஆதிதிராவிட மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும். இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் கூறினார்.
இலவசங்கள் வழங்க நிதி உள்ளதா? காங்., தேர்தல் அறிக்கையில் ஏராளமான இலவசங்கள் தாராளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை வழங்குவதற்கு மாநில அரசிடம் நிதி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, மத்திய அமைச்சர் நாராயணசாமி அளித்த பதில்: புதுச்சேரி அரசின் வருமானம் பெருகி உள்ளது. 1400 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் வருகிறது.

 இவற்றைப் பயன்படுத்தியும், மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியைப் பெற்றும் இலவசங்களை நிறைவேற்றுவோம். தமிழகத்திலும் இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.என்றார்.
நன்றி:http://www.inneram.com

No comments:

Post a Comment