Friday, April 8, 2011

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு


 வாக்களிப்பதற்கு முன்பு யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை பகிரங்கமாக சொல்பவர்கள், வாக்கைப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்களிப்பதற்கு முன்பு, குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்குத்தான் ஓட்டுப்போடப் போகிறேன் என்று வாக்காளர்கள் வெளிப்படையாக சொல்லக்கூடாது. அப்படி எந்த வாக்காளராவது வெளியிட்டால்....
அவர் ஓட்டு போடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார். வாக்களித்தப் பிறகும் கூட எந்த கட்சிக்கு அல்லது எந்த வேட்பாளருக்கு ஓட்டு போட்டேன் என்பதை சொல்லக்கூடாது. அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இதை மீறி ஒருவர் தனது ஓட்டு ரகசியத்தை வெளியிட்டால், அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 128-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.


ஓட்டுப்பதிவு தினத்தன்று வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப்போடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. யாருக்கு வாக்களிக்கிறார் என்று தெரியும் வகையில் போட்டோவும் எடுக்கக்கூடாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்னணு எந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதி அருகே வாக்குச்சாவடி அதிகாரிகள், ஏஜெண்டுகள் உள்பட யாரும் வரக்கூடாது. மாற்றுத் திறனாளி வாக்களிக்க வரும் பட்சத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் உதவி செய்யலாம்.



வாக்காளர்களை கட்சிக் காரர்கள் யாரும் ஓட்டுச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது. அது சட்டப்படி குற்றமாகும். வாக்களிக்க பணம் கொடுப்பது, மதுபானம், விருந்து, பரிசுகள் கொடுப்பது தவறாகும். மதம், சாதி அடிப்படையில் வாக்காளர்களை கவருவதும் குற்றமாகும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment