Friday, April 29, 2011

ஐ.நா முட்டாள்களின் குழு! இலங்கை அமைச்சர் ஆவேசம்


கொழும்பு: இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான போர்க் குற்றங்கள் குறித்து ஆய்வுசெய்த ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவை “மூவர் முட்டாள் குழு” என இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச ஆவேசமாக சாடியதாக இலங்கை தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.


ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் மூன்று முட்டாள்கள் குழுவானது இலங்கையில் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான பொம்மை அரசை நிறுவுவதற்கான சதித்திட்டங்களுக்குத் துணை போயுள்ளதாக விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார் பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை குழுவொன்று தாம் தயாரித்த அறிக்கையை செயலாளர் நாயகம் படித்துப்பார்க்க முன்பதாகவே வெளியிட்ட சம்பவம் வரலாற்றில் இதுதான் முதல் தடவை என அவர் குறிப்பிட்டார்.

முட்டாள்கள் குழுவின் அங்கத்தவர்கள் மூவரும் பணத்துக்காக விலைபோகக் கூடியவர்கள் அதிலும் குழுவின் தலைவர் தருஸ்மன் பற்றி சொல்லவே தேவையில்லை. ஏனைய இருவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நீண்ட காலம் தொடக்கம்முதலே செயற்பட்டவர்கள். இந்த நிலையில் அந்த குழுவின் அறிக்கை நோ்மையான முறையில் இருக்கும் என கருதமுடியாது என்றார்.

மேலும் இலங்கைக்குள் மற்றொரு நாட்டை ஏற்படுத்துவதுடன், இலங்கை அரசாங்கத்தை தமது இஷ்டம் போல ஆட்டி வைக்கும் மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சியையே அவர்கள் தங்கள் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர் என்று அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக பேசியுள்ளார்..
U.N stupid’s group says Sri lankan minister 

No comments:

Post a Comment