Tuesday, April 26, 2011

இந்திய கறுப்புப்பண முதலைகளின் விபரம் விரைவில்! விக்கிலீக்ஸ்


புதுடெல்லி: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்திய கறுப்புப்பண முதலைகளின் விபரத்தை விரைவில் வெளியிடப்போவதாக உலகின் பிரபலமான “விக்கிலீக்ஸ்” இணையதளம் அதிரடியாக அறிவித்துள்ளது. உலக அளவில் சுவிஸ் வங்கிக்கு இந்தியாவிலிருந்துதான் மிக அதிகமானறுப்பு பணம் வருகிறது என்றும் விரைவில் ந்த கறுப்பு பண முதலைகளின் பட்டியல் நிச்சயம் வெளிவரும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் கூறியுள்ளார்.
உலக நாடுகள் பலவற்றின் குறிப்பாக அமெரிக்காவின் ரகசியங்களை  தனது விக்கிலீக்ஸ்வெப்சைட்டில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசான்ஜ்.
ஆங்கிலச் செய்திதாள் ஒன்றுக்கு அசான்ஜ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் உள்ள பல வங்கிகளில் இருந்து கறுப்பு பணம் உள்ளீட்ட பலவிதமான தகவல்களை திரட்டி வருகிறோம். விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மீது  பல வங்கிகள் அதிகளவில் வழக்குகள் தொடுத்துள்ளன. அதை புறக்கணித்து விட்டு தொடர்ந்து தகவல்களை வெளியிடுவோம். இந்தியாவில் கறுப்பு பணம் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்தியாவில் இருந்துதான் கறுப்பு பணம் அதிகம் வருகிறது. நாங்கள் திரட்டியுள்ள தகவல்களில் பல இந்தியர்களின் பெயர்கள் உள்ளன. இது பற்றி தொடர்ந்து விசாரித்து தகவல்கள் வெளியிடுவோம்.
றுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் ஒருநாள் நிச்சயம் வெளிவரும். சாமானிய இந்தியர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். கறுப்பு பண விஷயத்தில் ஜெர்மனி அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வரிஏய்ப்பு செய்பவர்களின் பட்டியலை பெறுவதில் அமெரிக்காவும் முனைப்புடன் உள்ளது. அதேபோல இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜூலியன் அசான்ஜ் கூறியுள்ளார்.
Indian black money account holders in Swiss bank list will be released! Wiki leaks  

No comments:

Post a Comment