Tuesday, April 19, 2011

விரல் நுனியில் இணைய நூலகங்கள் (E-Library)...


கல்வி அறிவிற்காக நாம் அன்று நூலகங்களை தேடி ஓடிய நாட்கள் உண்டு இன்று நம்மை தேடி அத்தனை நூலகங்களும் விரல் நுனியில் நம் இல்லம் தேடி வந்து விட்டது . ஆம் இன்று மின் நூலகங்கள் எனும் பெயரில் வகைவகையான ஏராளமான புத்தகங்களை நாம் இணையதளத்தில் பார்க்கலாம் படிக்கலாம். நாம் கல்வி அறிவை உயர்த்த கல்லூரிகள், நூலகங்கள் என தேடிச் செல்ல வேண்டாம். அவையனைத்தும் இன்று நம் இல்லத்திலே பெறமுடியும். அதில் நம் பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும்  பயன்தரும் சில இணைய தளங்களை தங்களின் பார்வைக்காக வைத்திருக்கிறேன்...

1. http://www.textbooksonline.tn.nic.in/
தமிழக அரசின் கல்வி அமைச்சகம் உருவாக்கியுள்ள இத்தளத்தில்1 ஆம் வகுப்பு முதல் +2 எனப்படும் 12 ம் வகுப்பு வரை உள்ள தமிழ், அறிவியல், கணக்கு என அனைத்து பாடப்புத்தகங்களும் உள்ளன.

2. http://www.alfy.com/
இது சிறுவர்களுக்கான இணையதளம் விளையாட்டுக்கள், மற்றும் கலரிங், வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன் கூடிய கற்கும் ஆற்றலை மேம்படுத்துகிறது.

3. http://www.coolmath4kids.com/
இது குழந்தைகளின் கணித அறிவை அழகான விளையாட்டுடன் கற்று தருகிறது.

4. http://kids.yahoo.com/
இது குழந்தைகளுக்காக யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும்.

5. http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp
இது தினமலர் நாளிதழின் கல்விக்கான படைப்பாகும் இதிலே மாணவர்களுக்கான தகவல்கள் குவிந்து இருக்கின்றன.

6. http://www.educationatlas.com/
மாணவர்களுக்கு படிக்கும் திறனைச் வளர்க்கவும், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக்கொள்ளவும், அவற்றினை மேம்படுத்தவும் இத்தளம் உதவுகிறது

7. http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆங்கில அறிவினை அடிப்படையில் இருந்து வளர்த்து கொள்வதற்கான தளம்.

8. http://www.tamilnotes.com/
பள்ளி மாணவர்கள் தமிழ் இலக்கண அறிவை வளர்த்து கொள்வதற்கு ஒரு அருமையான இணையம்.

No comments:

Post a Comment