சென்னை: பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. மாலை 5 மணிவரையில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் காலையிலிருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். பல இடங்களில் மின்னணு எந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு தாமதமாக தொடங்கியது. அந்த இடங்களில் ஓட்டுப்போட அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அனைத்து வாக்குசாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் தமிழக சட்மன்ற தேர்தலில் 75.2 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து மாவட்ட நிலவரம் அறிந்த பின் இறுதி நிலவரம் குறித்தும் அறிவிக்கப்படும் என்றார்.
Tamil nadu, election, puduvai, polling, assembly
Tamil nadu, election, puduvai, polling, assembly
No comments:
Post a Comment