Monday, April 18, 2011

கலோரி “எரிக்க…… ட்ரெட்மில் (Treadmill)...!


உடலில் கொழுப்பு சேர்ந்தால், கொலஸ்ட்ரால் அதிகமாகிறது; கொலஸ்ட்ரால் அதிகமானால், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது; அதோடு விடுவதில்லை…சர்க்கரை நோயும் ஆரம்பிக்கிறது. போதாதா…அப்புறம் டாக்டரிடம் அடிக்கடி “விசிட்’ அடிக்க வேண்டும்; தினமும் காலை, இரவில் மாத்திரைகளை பட்டியல் போட்டு விழுங்கத்தான் வேண்டும். இதை அனுபவித்த வருபவர்களுக்கு இதெல்லாம் பழகி விட்டது. என்ன சாப்பிட வேண்டும், எந்த மாத்திரையை விழுங்காவிட்டால் ரத்த அழுத்தம் எகிறும், சர்க்கரை அளவு கூடும் என்பதெல்லாம் அத்துபடி.

ஆனால், தங்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளதா, சர்க்கரை அளவு ஏறியிருக்கிறதா என்று அறியாமல், நாற்பதை தாண்டியும் வாயை அடக்காதவர்கள் தான் படாதபாடு படுகின்றனர். அவர்கள் இப்போதே உணர்ந்தால், முற்றாமல் தவிர்த்து விட முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? உணவும், உடற்பயிற்சியும் தான் மிக முக்கியமானவை. இதில் ஒன்றை விட்டு, மற்றொன்றை வைத்து சமாளிக்கலாம் என்று நினைத்தால் அது தான் பெரிய தவறு.
விடவேண்டிய உணவு
கொழுப்பு அதிகரிக்காமல் இருக்க இளைய வயதில் இருந்தே வாழ்க்கை முறை, உணவு முறையில் மாற்றம் கடைபிடிக்க வேண்டும்.மது< சிகரெட் இல்லாத வாழ்க்கை முறை தேவை; உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பு தர வேண்டும். அசைக்காமல், கம்ப்யூட்டரிலேயே நேரத்தை ஓட்டக் கூடாது. அப்போது தான் உடலில் உள்ள எல்லா தசைகளும், எலும்புகளும், ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.உணவுகளை பொறுத்தவரை, கொழுப்பு சேராத உணவு வகைகள் இருக்கின்றன. அதை விட்டு, கொழுப்பு சார்ந்த உணவுகள் தான் இப்போது இளைய தலைமுறையினருக்கு அதிகம் பிடிக்கிறது.
எட்டிக்கூட பார்க்கக்கூடாது என்று கருதப்படும் உணவுகள் என்றால், பால், பால் பொருட்கள், ஐஸ்கிரீம் போன்றவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். அடுத்து, மாமிசம். அசைவ உணவு பிரியர்களுக்கு கஷ்டமாக இருந்தாலும், இதை அறவே கைவிட்டு விட வேண்டும். மூன்றாவது, சமையல் எண்ணெய். எந்த உணவிலும் எண்ணெயை சேர்க்கவே கூடாது. உறைய வைக்கப்பட்ட கொழுப்பில்லாத சில எண்ணெய்கள் உள்ளன. அவற்றை சுமாராக பயன்படுத்தலாம். பாலாடைக்கட்டி, முட்டை மஞ்சள் கரு, பதப்படுத்தப் பட்ட மாமிசம் ஆகியவையும் கண்டிப்பாக கைவிட வேண்டும்.
கொழுப்பு குறைந்தவை
பழங்கள், காய்கறிகள், மீன் உணவுகள், தானிய வகைகள், அரிசி, சில கொட்டை வகை உணவுகள், தாவர எண்ணெய் போன்றவை கொழுப்பு குறைந்த உணவுகள்.இதனால் தான், அசைவ உணவில் மீன் தவிர, மற்ற மாமிச உணவுகள் வேண்டாம் என்று டாக்டர்கள் கூறுகின்ற னர். சைவ உணவுகளில் காய்கறி, பழங்கள் மிகவும் நல்லது.
கொலஸ்ட்ரால் ஒரு சதவீதம்
ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்வதை தடுக்க வேண்டுமானால், அதற்கு மருந்து மாத்திரை தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை வராமல் தடுத்து விடலாம்.
அதற்கு உணவு வகைகள் தான் சிறந்தவை.காய்கறி, பழங்கள் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றால், ஒரு சதவீதம் கொலஸ்ட்ரால் குறைத்தால், இரண்டு சதவீத மாரடைப்பு வாய்ப்பை குறைத்துக் கொள்வதாக பொருள்.
ட்ரெட்மில்
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அறிகுறி இல்லாதவர்கள் வெகு குறைவு. அதுவும் நாற்பது வயதாகி விட்டால், கண்டிப்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய இரண்டில் ஒன்று எகிறி இருப்பது தெரியும். அதனால், முப்பதி லேயே முன்னெச்சரிக் கையாக இருந்தால், இந்த கவலையை பட வேண்டாம்.ஆனால், அதை பலரும் உணராமல் இருப்பதற்கு அவர்களின் இயந்திர வாழ்க்கை தான் காரணம். அதனால், தான் இப்போது “ஜிம்’கள் பெருகி விட்டன.சாலையில் நடக்கக்கூட நேரமில்லாத இயந்திர வாழ்க்கையாகி விட்டது பலருக்கு.
“ஜிம்’களில் “ட்ரெட் மில்’ என்ற, நின்ற இடத்தில் “வாக்கிங்’ போக வகை செய்யும் இயந்திரம் தான் இப்போது பல டாக்டர்கள் சிபாரிசு செய்யும் சுலப முறை.”ட்ரெட்மில்’லில் டாக்டர் சொல்படி கி.மீ., அளவை பதிவு செய்து விட்டு, குறிப்பிட்ட நிமிடங்கள் வரை அதில், நின்ற இடத்தில் நடந்தால், உடலில் கலோரி சத்து “எரிக்கப் பட்டு’ கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவு குறைய வாய்ப்பு அதிகம்.
பெடோமீட்டர்
அடுத்து “பெடோமீட்டர்’ கருவி. இதை “மொபைல்’ போன் போல இடுப்பு பெல் டில் கட்டிக் கொண்டால் போதும். நீங்கள் எத்தனை தூரம் நடந்தீர்களோ, அதற்கு உண்டா பலனை சொல்லி விடும். அதாவது, எவ்வளவு கலோரி “எரிக்கப் பட்டுள்ளது?’ எத்தனை கொலஸ்ட்ரால் குறைந்துள்ளது போன்ற புள்ளி விவரங்கள் தெரிந்து விடும்.
ஒரு மாதத்தில் எவ்வளவு கலோரி “எரிக்க’ முடியும் என்பதை கணக்கிட்டு “வாக்கிங்’ போகலாம். சென்னை உட்பட, நகரங்களில் இந்த “பெடோமீட்டர்’ தான் அதிகமாக விற்பனை ஆகிறது.

No comments:

Post a Comment