Thursday, April 14, 2011

அன்னா ஹசாரே! காந்தியவாதியா? காவிவாதியா.....?


 இந்த வாரம் முழுவதும் பத்திரிகையில் நிறைந்து நின்ற நபர் அன்னா ஹசாரே, யார் இவர்? இத்தனை நாள் இவர் எங்கே இருந்தார். இதுபோன்ற ஆயிரமாயிரம் கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. ஊழல் நடப்பது நம் நாட்டில் ஒன்றும் புதிதல்ல. இதற்க்கு முன்பும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு வாங்கிய ஆயுதத்திலும், கார்கில் யூத்தத்திலே கொல்லப்பட்ட வீரர்களுக்கு வாங்கிய சவபெட்டிகளிலும், கொள்ளை அடித்தார்கள். அப்போது இந்த அன்ன ஹசாரே எங்கு இருந்தார்?. இப்போது நடந்த ஜி ஊழலின் தொடக்கமே பாரதிய ஜனதா கட்சிகாரர்கள் ஆட்சியில்தான். அப்போது இந்த காந்தியவாதி எங்கு இருந்தார்?

குஜராத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக கலவரம் நடந்ததே ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொள்ளபட்டர்களே அப்போது இவர் எங்கே போனார். இன்றும் அந்த கயவர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்து இருக்கிறார்களே மோடியின் ஆட்சியில் ஊழலும், மதவாதமும் தலைவிரித்தாடுதே அவர்க்களுக்கு எதிராக இந்த காந்தியவாதி என்ன செய்தார்?.



இந்தியா முழுவதும் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்றார்களே அப்போது இந்த காந்தியவாதி எங்கு இருந்தார்? இந்தியாவின் ஆண்மகன் கர்கரே கொல்லப்பட்டாரே அப்போது இவர் எங்கு போயிருந்தார்?. இதை செய்த காவிபயங்கரவாதிகள் இப்போதும் வெளியில், அப்பாவி மக்கள் இப்போதும் ஜெயிலில் இது இந்த வெத்து வேட்டு காந்தியவாதிக்கு தெரிய வில்லையா? தெரிய! விரும்ப வில்லையா?.

ஏன் இந்த கேள்விகள் நம் மனதில் எழுகின்றது என்றால்! இந்த காந்தி வேடம் போடும் நபர் நடத்தின ஊழல் எதிர்ப்புக்கு முழு ஆதரவு கொடுத்தவர்கள் நம் தேசபிதா மகாத்மா காந்தியை கொன்ற ஆர் எஸ் எஸ் பயங்கரவாத கூட்டத்தினர்கள்.  இந்த காந்திய வேடதாரி! இப்போது புறப்பட்டது குண்டு வெடிப்புகளில் சிக்கித்தவிக்கும் ஹிந்து தீவிரவாதிகளை காப்பாற்றவா? நாட்டை காப்பாற்றவா? இந்த அன்ன ஹசாரே 
போராட்டத்தை இந்த பார்பன ஊடகங்கள் ஒரு பெரிய விசயமாக தூக்கி பிடிக்கும் போதே சந்தேகம் வந்தது. அது இப்ப நிரூபணம் ஆகிவிட்டது. தமிழில் ஒரு பழமொழி உண்டு! "எலிக்கும் பூனைக்கும் கல்யாணமாம்" அது போல்தான் இருக்கிறது "காந்தியவாதிக்கு காந்த்திஜியை கொன்றவர்களுடன் கூட்டு" இது எப்படி இருக்கு?



Tags: puduvai, anna hazare, advani, RSS, congress, 2G, gandhi

நன்றி: சிந்திக்கவும்.நெட்

No comments:

Post a Comment